திரு தியாகராசா உதயகுமார்
தோற்றம் : 24 03 1978 - மறைவு : 31 05 2011
| அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Munchengladbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா உதயகுமார் அவர்கள் 31-05-2011 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார். அன்னார், தியாகராசா யோகேஸ்வரி தம்பதிகளின் அருமை புதல்வரும், அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா, காலஞ்சென்ற யோ.பாலசந்திரன், மற்றும் லீலாவதி(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்புப் பேரனும், தியாகயோகன்(ரமேஸ்), அமிர்தயோகன்(அமிர்), வசந்தயோகினி(சுதா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சங்கீதா, நிக்கோ ஆகியோரின் அன்பு மைத்துனரும், பவதாரினி, சாமினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், கெவின் அவர்களின் அன்பு மாமனாரும், சோமசுந்தரம்- யோகவதி, தனிகாசலம்- சிவமலர், விக்கினேஸ்வரன்- அமிர்தயோகநாயகி, கெங்கராசா- யோகாம்பாள், ராஜ்குமார்- பாலயோகினி, செல்வி, லீலயோகினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும், கனகாம்பிகை, பாலயோகன்- கமலாம்பிகை, சண்முகநாதன்- யோகேஸ்வரி, நவயோகன் - தயாநிதி, இந்திரயோகன்- கலா, ராஜயோகன்- பிரியா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். | ||||||||||||
| தகவல் | ||||||||||||
குடும்பத்தினர்
| ||||||||||||
