|
அன்னை மடியில் : 17 பெப்ரவரி 2010 — ஆண்டவன் அடியில் : 30 டிசெம்பர் 2011
இலண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜானு ஜெகதீஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வும், நன்றி நவிலலும்.
அன்னார், ஜெகதீஸ்வரன் மங்கயற்கரசி தம்பதிகளின் தவப்புதல்வியும்,
பானு அவர்களின் இணைச் சகோதரியும் ஆவார்.
ஜானு ஜானு ஜானு ஜானு எங்கேயம்மா சென்றாய் ஜானு? பத்து வருடம் தவமிருந்து பெற்ற செல்லமடா ஜானு.. அப்பாவின் தவத்தில் இத்தெய்வங்கள் கண்ட குறைதான் என்னவோ தெரியாதம்மா?எங்கேயோ அனுப்ப வேண்டிய காலனை எங்கள் குலவிளக்கே உன்னை நோக்கி அனுப்பிய இத்தெய்வங்களுக்கு கண்ணுமில்லை கருணையுமில்லையம்மா...
ஜானு ஜானு ஜானு ஜானு நீயின்றி உணவேதுமின்றி தவிக்கின்றாள் உன் அன்னை, உன்னுடனே உண்டு, உன்னுடனே உறங்கிய உன் தங்கை பானு, நீயின்றி உண்ணவும் மறுத்து, உறங்கவும் மறுத்து மீளாத்துயரில் தவிக்கின்றாளம்மா...
என்மீது மண்போட்டு எனைப்புதைக்க நீயிருக்க உன்மீது மண்போட்டு உனைப்புதைத்த பாவியடா உன் அப்பா.. மன்னிப்பாயாடா ஜானும்மா அப்பாவை மன்னிப்பாயடா...
சிலிர்த்தோமம்மா உன் சிரிப்பினில் அன்று தவிக்கின்றோமம்மா உன்பிரிவில் இன்று... ஜானும்மா உன் பிரிவை தாங்கும் மனம் கொடுத்த அந்த கடவுளுக்கு நன்றி சொல்லவா இல்லை இரக்கமின்றி இக்கொடுமை புரிந்த கடவுளை திட்டி தீர்க்கவா..
எதுவுமே தெரியாமல் குழம்புகிறோமம்மா, தினம் தினம் உன்னால் புலம்புகிறோமம்மா.. ஜானும்மா என் தங்கமே உன் பேச்சும் மூச்சும் இன்னும் என்னை ஊடுருவி செல்கிறதடா.. நம்புகிறேனம்மா, நிச்சயம் நீங்கள் எங்களிடம் வருவீர்கள் என்று.... அதுவரை நடைபிணமாய் உங்கள் வரவை நோக்கி காத்திருகிறோமடா என் செல்லமே... ஜானு ஜானு ஜானு ஜானு...
எமது தவப்புதல்வியின் பிரிவுத்துயரில் எம்மோடு கலந்து துயர் பகிர்ந்து
கொண்ட அனைவருக்கும் தொலைபேசி மூலமும், நேரிலும் அனுதாபம்
தெரிவித்தவர்களுக்கும், இறுதிக்கிரியையில் இறுதிவரை நின்று சகல உதவிகளை
புரிந்தவர்களுக்கும் எமது நன்றியை தெரிவிப்பதோடு 29-01-2012
ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது வீட்டில் நடைபெறும். எமது மகளின் 31வது நாள்
நிகழ்வில் உங்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
786, Garratt Lane, Tooting Broadway, London SW17 0LZ |