ஸ்ரீ பக்த ஹனுமான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமும் வருஷாபிஷேக விஞ்ஞாபனமும்.

 
இலங்கை சின்மயா மிஷன் இராம்போத ஸ்ரீ பக்த ஹனுமான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமும் வருஷாபிஷேக விஞ்ஞாபனமும் 02-04-2012 தொடக்கம் 06-04-2012 வரை நடைபெறவுள்ளன.

இதனையொட்டி எதிர்வரும் 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சாந்தி வழிபாடு நடைபெறவுள்ளது. 2 ஆம்; திகதி திங்கட்கிழமை தொடக்கம் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 8.30 மணிக்கு அஷ்டோத்தர சத சங்காபிஷேகமும் (108), நண்பகல் 12.00 மணிக்கு விஷேட வசந்த மண்டபப் பூஜையும் சுவாமி உள்வீதி, வெளிவீதி உலா என்பன நடைபெற்று அன்னதானமும் வழங்கப்படும்.

இறுதி தினமான 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மோதிர திருவிழாவுடன் இனிதே நிறைவுபெறும்