மோகனதாஸ் சோமசேகரம்(மோகன்)
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சுவீடனை வசிப்பிடமாகவும்
கொண்ட மோகனதாஸ் சோமசேகரம் அவர்கள் 05-06-2012 செவ்வாய்க்கிழமை அன்று
அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசேகரம், மற்றும் சுவீடனில் வசிக்கும் மங்கையற்கரசி அவர்களின் அன்பு மகனும்,
கயல், காலஞ்சென்ற ஜசித்தா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
செல்வன்(சுவீடன்), பிறேம்(சுவீடன்), அன்பன்(பிரித்தானியா), செங்கமலர்(சுவீடன்), ஸ்ரீமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காண்டீபன், சுதேசமித்திரன், ஆஷா, உமா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தனுஜன், அஜீவன், அக்ஸயா, அஸ்மிதா ஆகியோரின் பெரியப்பாவும்,
சுபோஜன், டயான், மத்தியூ, செறின் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
ஜசித்தா மோகனதாஸ்
சுவீடனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜசித்தா மோகனதாஸ் அவர்கள் 30-05-2012 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்
அன்னார், காலஞ்சென்ற மோகனதாஸ்(மோகன்) அவர்களின் பாசமிகு மகளும்,
கயல் அவர்களின் அன்புச் சகோதரியும்,
செல்வன்(சுவீடன்), பிறேம்(சுவீடன்), அன்பன்(பிரித்தானியா), ஆஷா(சுவீடன்), உமா(பிரித்தானியா) ஆகியோரின் பெறாமகளும்,
காண்டீபன், சுதேசமித்திரன், செங்கமலர்(சுவீடன்), ஸ்ரீமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் மருமகளும்,
தனுஜன், அஜீவன், அக்ஷ்யா, அஸ்மிதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சுபோஜன், டயான், மத்தியூ, செறின் ஆகியோரின் மச்சாளும்,
காலஞ்சென்ற சோமசேகரம், மங்கையற்கரசி(சுவீடன்) அவர்களின் பேத்தியும் ஆவார்.
அன்னார்களின் பூதவுடல்கள் 26-06-2012 செவ்வாய்க்கிழமை
பிற்பகல் 2:00 மணியளவில் ஸ்கர்ஹோல்மேன்ஸ் தேவாலயத்தில்(Skärholmens Chruch,
முகவரி Bodholmsplan 1, 127 48 SKÄRHOLMEN) திருப்பலி
ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தல்களை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|