5ம் ஆண்டு நினைவலைகள்

கார்த்திகேசு செல்வேந்திரன்
(மாவீரன் கானகவேங்கை தமிழீழம்)
வீரப்பிறப்பு : 27 ஏப்ரல் 1980 — வீரச்சாவு : 25 செப்ரெம்பர் 2007
சங்கர்தார்வயல் இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு செல்வேந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டுகள் ஐந்து ஓடி மறைந்ததுவே
ஆரூயிர் செல்வமே எமை விட்டு எங்கு சென்றீர்;
அன்பான எம் துணையே அனுதினம் உன் நினைவால்
அடி எடுத்து வைக்கின்றோம்.

பண்பின் சிகரமே பாசத்தின் உறைவிடமே
பாதியிலே எமை பிரிந்ததன் விந்தை என்ன
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே நீ அருகிருக்கும்
உணர்வுகளோடு அவனிலே வாழ்கின்றோம்- ஆறாத
உன் நினைவுகளை நெஞ்சத்துள் சுமந்தபடி
இவ் வையத்தில் தலை நிமிர்ந்து வாழ்கின்றோம்.

எழில்கொண்ட உன் முகமும் எடுப்பான நடையும்
காண்போரை மகிழ்விக்கும் கனிவான பேச்சும்
கடமையிலே காட்டும் கண்ணியத்தையும் - இனி
எப்பிறப்பில் நாம் காண்போம் இந்திரனே.
மலைபோல மகிழ்வொன்று எம்மேல் வந்து வீழ்ந்தாலும்
மனம்தனில் நுழையாது ஏனெனில் நாம் மகிழ நீ வேண்டும்

ஆண்டுகள் ஐந்தல்லா அளவிலா ஆனாலும் -ஆறாது
செல்வமே எம்மைவிட்டு நீ பிரிந்த துயர் எனினும்
ஜடமாக வாழ்கின்றோம் உன்இலட்சியக்கனவு
        ஈடேறும் என்ற நம்பிக்கையுடன்…

“எம் குலக்கெழுந்துடன் விதையான ஏனைய செல்வங்களையும்
               இந்நாளில் நினைவு கூருகின்றோம்
தகவல்
என்றும் இந்திரன் நினைவுடன் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கார்த்திகேசு — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61387075159
- — மலேஷியா
தொலைபேசி:+60146637764