3ம் ஆண்டு வீரநினைவஞ்சலி

லெப்டினண்ட் கேணல் ஆனந்தன் 
(கிறிஸ்னர் சிறீதர்) 
வீரப்பிறப்பு : 2 ஏப்ரல் 1984 — வீரச்சாவு : 16 டிசெம்பர் 2008

தமிழீழத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லெப்டினண்ட் கேணல் ஆனந்தன் என்று அழைக்கப்பட்ட கிறிஸ்னர் சிறீதர் அவர்களின் 3ம் ஆண்டு வீரநினைவஞ்சலி
அன்புக்கினியவனே!
அருமை அண்ணா!
மூன்றாண்டு மறைந்தாலும்
முழு நிலவு போல்
எம் கண்முன்னே நிற்கின்றாய்
பாச மழையில் நனைந்து
திரிந்த நாட்களை மறக்கமுடியவில்லை
அடர்ந்த காட்டுச்சோலை
அதை அண்டிய குளக்கரை ஒரம்
வாடை, உடலை வாட்டியதை மறந்து
தேசத்தின் விடியலினை
எதிர்காலத்தைப் பற்றி
எனக்கு எடுத்துரைத்தாய் அண்ணா!
விடியல் வருமென்று
விழி திறந்து காத்திருக்கும் வேளை
விடியல் வருமுன்பு
வீரம் கொண்டு மறைந்ததென்ன.
காலத்தின் கட்டாயத்தில்
கவிதைபாடும் பூங்குயில்கள்
உன் பெயரைச் சொல்லி
கண்ணீரை சோககீதம் இசைக்கின்றதே
ஆற்றொனா ஆழத்துயரில்
நான் இங்கே தவிக்க - நீ
அமைதியாக உறங்குவதென்ன அண்ணா!
வேற்று நடையென்ன
வீறு கொண்ட வாக்கியமென்ன
மின்னல்வேகப் பாய்ச்சலென்ன
இடி இறக்கும் உன்புலி வீரம் என்ன
நேற்றோடு வந்தபுயல் மாய்த்ததுவே
உன் உயிரை....இல்லையடா!
வீறு கொண்ட புலி நீ
வீழ்ந்து விடவில்லை......
விதையாக்கப்பட்டாயடா
நேற்று வந்த காற்றோடு
எல்லாம் முடிந்து விடவில்லை
விதைகள் விருட்சங்களாகும்
காற்றடிக்கும் புயல்காற்றும்
வலுவிழந்து ஆடி அடங்கும்.
தென்றலாய் எம்நாட்டுக்கு
சாமரம் வீசும், ஏனெனில்
நீங்கள் விருட்சங்கள் ஆவீர்கள்
பூத்தப் புன்சிரிப்பும்
பேசி மகிழ்ந்த வார்த்தைகளும்
என்றும் என் நெஞ்சைவிட்டு
அகலவில்லையடா அண்ணா!
நிச்சயம் விடியல்
நாளை வரும்... அன்று
உன் பெயர் சொல்லி
விடியல் பாடும்....
தகவல்
அன்புத் தம்பி
தொடர்புகளுக்கு
கே. கமல் — ஜெர்மனி
தொலைபேசி:+4915210707265
- — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33605521562