(இளைப்பாறிய அதிபர், யா/திருநெல்வேலி முத்துதம்பி மகாவித்தியாலயம்)பிறப்பு : 4 ஒக்ரோபர் 1948 — இறப்பு : 25 டிசெம்பர் 2011
| மல்லாகத்தைப்
பிறப்பிடமாகவும், கட்டுவனை வாழ்விடமாகவும், தற்போது நல்லூரை
வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா சிவராஜா அவர்கள் 25.12.2011
ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா-செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம்-பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சாரதாதேவி(ஆசிரியை - வேம்படி மகளிர் கல்லூரி) அவர்களின் பாசமிகு கணவரும், நிருஜா, கம்சாஜி, உமாறாஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும், மயூரன் அவர்களின் அன்பு மாமனும், காலஞ்சென்ற தங்கவேலன் அவர்களின் அருமைச் சகோதரரும், தேவகி(யாழ் பல்கலைக்கழகம் நிர்வாக பிரிவு), மகேந்திரன்(கனடா), மனோகரன்(கனடா), சகுந்தலாதேவி(கனடா), சக்திதேவி(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.12.2011 வியாழக்கிழமை அன்று காலை கோவில் வீதி, நல்லூரில் உள்ள அவரது வதிவிடத்தில் நடைபெற்று, பின் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
| தகவல் |
| குடும்பத்தினர் |
| தொடர்புகளுக்கு | ||||||||
| ||||||||
