|
அன்னை மடியில் : 16 ஏப்ரல் 1955 — ஆண்டவன் அடியில் : 7 சனவரி 2012
யாழ்.ஏழாலை தெற்கை பிறப்பிடமாகவும்,
வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சிவபாலன் அவர்கள் 07 -01-2012 சனிக்கிழமை
அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவலிங்கம், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
குமாரசாமி, கந்தசாமி, காலஞ்சென்ற லோகேஸ்வரி, கெளரீஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,
கணநாதலிங்கம், ஈஸ்வரலிங்கம், சபேசலிங்கம், நேசமணி, ஆகியோரின் அன்பு மருமகனும்,
சிவரூபன், வசந்தி, சிவகாந்தன், வசிகரன், ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
ஆனந்தகுமார், விமலா, வசந்தி, மீனா, விஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிலோஜா, டக்சிக்கா ஆகியோரின் அன்புப் பெரிய மாமாவும்,
அனுசிஜா, நிரோஷன், நிலானுஜா, பிரணவன், அபிநயா, அன்சியா, அஜய், அதீஷன், அபினாஷ், சிவகேஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்,
அன்னாரின்
ஈமக்கிரியைகள் 10-01-2012 செவ்வாய்க்கிழமை அன்று பி:ப 03:00 மணிக்கு
வசந்தமஹால், ஏழாலை தெற்கு சுன்னாகத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்
நடைபெற்று, ஏழாலை களவாவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |