3ம் ஆண்டு நினைவஞ்சலி



அமரர் சொரூபன் சுருதியன் 
அன்னை மடியில் : 13 மார்ச் 2005 — இறைவன் அடியில் : 13 மே 2009

கிளிநொச்சி தருமபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொரூபன் சுருதியன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் கண்மணியே, கனியமுதே சுருதிக்குட்டி
அன்னை தந்தையின் வாழ்வினில்
அமிர்தமாய் இனித்தவனே...!!!
கொஞ்சி கொஞ்சிப் பேசி
மகிழ்வு தந்தவனே...
உன் வண்ணமுகம் காண
பல நூறு கண்கள் வேண்டுமடா...
தாய்க்குத் தலைமகனாய்
நல்லவனாக வல்லவனாக பலரும் போற்ற
தரணியெங்கும் வலம் வருவாய் என்று
நாம் எண்ணியிருக்க
முள்ளிவாய்க்கால் கோரத் தாண்டவத்தில்
தந்தைக்கு துணையாகப் பலியாகிப் போனீரோ???
உன் அன்னையின் பரிதவிப்பினை
தங்கையின் ஏக்கத்தை நீயும்
அறிவாயோ கண்ணே...!!!
கூடி விளையாட அண்ணன் இல்லை
கொஞ்சி மகிழ்ந்திட தந்தை இல்லை
அன்னையின் வேதனைக்கு அளவேது???
ஆறுதல் சொல்ல வந்திடுவாய்
மீண்டும் எம்மிடமே.....
எங்கள் செல்வத்தோடு, விவேகன்
தமிழவள், நளாயினி, சிவசோதி
ஆகியோர் ஒரே நாளில்
மடிந்து போன
உறவுகளையும் நினைவுகூருகிறோம்...!!!
எங்கள் செல்வங்களின் பிரிவால்
என்றும் வாடும்
உன் அன்பு உறவுகள்...!!!
தகவல்
குடும்பத்தினர்