
பிறப்பு
- |
இறப்பு
2012-09-03 |
|
| |
பிறந்த இடம்: |
| |
வயாவிளான் |
| |
|
| |
வாழ்ந்த இடம்: |
| |
கிளான் |
வயாவிளான்
தெற்கைப் பிறப்பிடமாகவும், கிளானை கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும்,
தற்போது புத்தூரை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை துரைரத்தினம் (ஓய்வு
பெற்ற ஆசிரியர்) நேற்று முன்தினம் (03.09.2012) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம் தம்பதியரின் அன்பு
மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செல்லமுத்து தம்பதியரின் அன்பு
மருமகனும், மனோன்மணியின் அன்புக் கணவரும், கதிர்காமலிங்கம் (ஜேர்மனி)
ரவீந்திரன் (ஜேர்மனி) முருகானந்தன் (கனடா) நந்தினி, இளமுருகன் (சனசமூக
அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளூராட்சித்திணைக்களம்) ஆகியோரின் பாசமிகு
தந்தையும், பவானிதிசி (ஜேர்மனி) மைதினி (ஜேர்மனி) ஸ்ரீகாயத்திரி (கனடா)
பத்மநாதன் (சங்கீத ஆசிரியர் யா/ஸ்ரீகணேசா வித்தியாலயம் சித்தங்கேணி)
நளாயினி (ஆசிரியை யா/புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி) ஆகியோரின் அன்பு
மாமனும், ஆரபி (ஜேர்மனி) அருண், ஆரூரன் (ஜேர்மனி) அபர்ணா, ஹரன் (கனடா)
தர்ஷிகா, ஸ்ரீலவன், தரணிகா, மோகன்ராம், மோகனாங்கி, நாகநர்த்தனன், தர்ஷனா,
நாக கீர்த்தனன், ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ்சென்றவர்களான நவரட்ணம்,
சதாசிவம், மார்க்கண்டு, சபாரத்தினம் மற்றும் நாகரத்தினம், நவமணி,
காலஞ்சென்ற மனோன்மணி, மற்றும் பாலசிங்கம் , காலஞ்சென்ற நடராசா ஆகியோரின்
அருமைச் சகோதரரும், காலஞ்சென்ற பொன்னுப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை, தங்கம்,
மனோன்மணி, சின்னத்தம்பி, பொன்னையா, சிவசுப்பிரமணியம், செல்வநாயகி, மற்றும்
நிர்மலா, காலஞ்சென்றவர்களான ஈணூ.மாணிக்கம், மணிமேகலை, சிவதாசன் (முன்னாள்
நாடாளு மன்ற உறுப்பினர்) மற்றும் நடராசா, வயிரவப்பிள்ளை, நகுலேஸ்வரன்
ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பருத்தித்துறை வீதி, புத்தூர் மேற்கு
(நெஸ்லே பால் சேகரிப்பு நிலையம் முன்பாக) அமைந்துள்ள அவரது இல்லத்தில்
நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நாளை (06.09.2012) வியாழக்கிழமை 10
மணிக்கு சுன்னாகம் புத்தூர் வீதியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மயானத்திற்கு
எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
|