திரு அன்னலிங்கம் அமுதராஜ்

 
(ராசன்) 
மலர்வு : 14 யூலை 1976 — உதிர்வு : 5 ஒக்ரோபர் 2012


குமுதெனி, அல்வாய் வடக்கு, அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஆதியாமலை உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் அமுதராஜ் அவர்கள் 05.10.2012 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், அன்னலிங்கம் அருந்தவச்செல்வி தம்பதிகளின் அன்புமகனும், செல்வராசா சிவசோதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கோசலா அவர்களின் ஆசைக் கணவரும்,
அபிநயா, அபிஷன், அபிநேத்ரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அமிர்தா, அகிலன், அஜந்தா, அசோக், அஜந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிறிகாந்தன், தனுசா, செல்வராஜா (சிவா), விஜயகௌரி, இரஜிதா ஆகியோரினதும் கோபிநாத், கோபிராஜ், ஜெயந்தா, சுதர்சன் ஆகியோரின் மைத்துனரும்,
தர்சினி, சத்தியபாமா, சாந்தகுமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் , உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, மீளாத்துயர் கொள்ளும் அன்னாரின் ஆத்மா சாந்திக்காக அல்வாய் ஸ்ரீ வேவிலந்தை முத்துமாரியம்மனை வேண்டிநிற்கும்,
விக்கிரமன் சனசமூக நிலையம் - அல்வாய், விக்கிரமன் சனசமூக நிலையப் புலம்பெயர் உறவுகள்.
சாந்தி...! சாந்தி...!! சாந்தி...!!!
தகவல்
விக்கிரமன் சனசமூக நிலையம் - அல்வாய், விக்கிரமன் சனசமூக நிலையப் புலம்பெயர் உறவுகள்.
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி:+94775334841