|
அமரர் கிருஷ்ணபிள்ளை ஜெயக்குமார்
வீரப்பிறப்பு : 18 யூலை 1978 — வீரச்சாவு : 22 ஏப்ரல் 2000
கேப்டன் தமிழ்த்தென்றல் / ஆற்றரசன்
நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை
வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை ஜெயக்குமார் அவர்களின் 12வது
ஆண்டு வீரநினைவஞ்சலியும், வீரவணக்கமும்.
தாய் நாட்டின் விடுதலைக்காய் தன்னுயிரைத் தந்தவனே வீரமிகு தீரனாய் விடுதலை வேங்கையாய் வீரகாவியம் நீ படைத்தாய் தன்னுயிரைத் தந்தாய்!!!
தானைத் தலைவனின் தம்பியாய் தமிழ்த் தென்றல் எனும் புனைப்பெயரில் தமிழீழ மண்ணில் புகழ் படைத்தாய் உப்புக் காற்றோடு உறவாடிய எதிரியின் பாசறையை நீ தகர்த்து வீர காவியமாய் எம் மண்ணில் மாவீரரானாய்
அன்று எத்தனையோ உன் உறவுகளை இந்த மண்ணில் இழந்ததனால் தமிழீழ மண்ணை மீட்டெத்து புலிக்கொடி ஏற்றிவைத்திட மாவீரரானாய்!!!
ஆனையிறவு படைத்தளத்தில் அன்னியப்படைகளையே அழித்தொழித்து எம் மண்ணையே மீட்டெடுக்கும் உன்னதப் போரிலே உன் இளம் உயிரையே நீ கொடுத்தாய்
ஆனையிறவுப் பெருந்தள அழிப்பில் உன் இளம் உயிரையே நீ கொடுத்தாய் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
|