அமரர் அன்ரனிஸ் கலையழகன் றிஷான்
மண்ணில் : 5 நவம்பர் 2010 — விண்ணில் : 28 சனவரி 2012
| லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்ரனிஸ் கலையழகன் றிஷான் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில்
இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்லுகின்றேன்"
உன்னை தவமாய் தவம் இருந்து பெற்ற
உன் அன்னையை தவிக்க விட்டு தந்தையினதும் உன் அன்புத் தங்கையினதும் அன்பைவிட நீ இறைவன் மீது கொண்ட அன்பினால் இவ் உலகை வெறுத்து சென்றாயோ???
எங்கள் நெஞ்சை துயரம்
எனும் ஆழ் கடலில் ஆழ்த்தி சென்றாயோ? ஆண்டுகள் பல சென்றாலும் ஆழமாய் பறிந்த உன் நினைவுகள் எம்மை விட்டு விலகிடாது எம் குட்டியனே...
தேவன் எமக்குத்தந்த
தெய்வத்திருமகனே - இன்று தேடி அலைகின்றோம் - உன் அழகுத் திருமுகமே...!
எம் வாழ்வின் காம்பில் அரும்பிய
முதல் அழகுமலர் நீயே! மடியில் தவழ்ந்த மழலை நீயே...
மனதை ஆழ்ந்த துயரில்
ஆக்கிபோனாய் - எம் அன்புச் செல்வனே...
வருடங்கள் ஒன்றல்ல ஆயிரம்
கடந்தாலும் எம்மை வருடிகொண்டேயிருக்கும் - உன் நினைவுகள் எம் உயிரோடு...!!!
வீட்டு முகவரி:25, Queens Court,
Kenton Lane, Harrow Middlesex, HA3 8RL, United Kingdom. |
| தகவல் |
| பெற்றோர். |
| தொடர்புகளுக்கு | ||||||
| ||||||